முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு நடத்த அலுவலர் நியமனம்
சேலம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை, ஆய்வு செய்ய சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலக பணிகளை, ஆய்வு நடத்த மாவட்-டந்தோறும் சிறப்பு அலுவலர்களாக, பள்ளிக்கல்வித்துறையில், இயக்குனர், இணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ளவர்கள் நியமிக்-கப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டத்தில், ஆய்வு அலுவலராக தமிழ்நாடு பாடநுால் கல்வியியல் மற்றும் பணிகள் கழக இயக்குனர் குப்பு-சாமி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுத்துறை இணை இயக்குனர் ராமசாமி, ஈரோடு மாவட்டத்துக்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் சுகன்யா கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கும், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் முருகன் நாமக்கல் மாவட்டத்-துக்கும் ஆய்வு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.