மாணவியர் ஆபத்தான பயணம் அதிகாரிகள் விசாரணை
ஆத்துார், ஆத்துார் நகர் பகுதியில் நேற்று மாலை, 4:00 மணிக்கு, 'ஈகோ' மினி வேனில், பள்ளி மாணவ, மாணவியர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, இருபுறத்திலும் தலா இரு மாணவியர் என, 4 பேர், இட நெருக்கடியில், பக்கவாட்டு கதவுகளில் அமர்ந்தபடியும், மேற்புற இரும்பு கம்பியை பிடித்தபடியும் பயணித்தனர். இப்படியாக, முல்லைவாடியில் இருந்து, ராணிப்பேட்டை, பஸ் ஸ்டாண்ட், உடையார்பாளையம் வழியே, 3 கி.மீ.,க்கு மேல் பயணித்தனர். ஆபத்தான பயணம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, ஆத்துார் வட்டார போக்குவரத்து துறையினர் விசாரிக்கின்றனர்.வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறுகையில், ''வாகனத்தை இயக்கிய டிரைவர், மாணவிகளை அழைத்து வந்தவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.