உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மயான பகுதி மின்மாற்றியில் ஆயில், காப்பர் திருட்டு

மயான பகுதி மின்மாற்றியில் ஆயில், காப்பர் திருட்டு

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நடுவலுாரில், மயான பாதையில், 63 கே.வி.ஏ., மின்திறன் கொண்ட மின்மாற்றி உள்ளது. அதில் உள்ள ஒயரை, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர். தொடர்ந்து மின்மாற்றியில் இருந்த, 2 லட்சம் ரூபாய் மதிப்பில், 225 லிட்டர் ஆயில், 100 கிலோ காப்-பர்களை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து கெங்க-வல்லி மின்வாரிய உதவி பொறியாளர் பெரியசாமி நேற்று அளித்த புகார்படி, கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை