உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் மூதாட்டி காயம் போலீஸ் மீது வழக்கு

விபத்தில் மூதாட்டி காயம் போலீஸ் மீது வழக்கு

விபத்தில் மூதாட்டி காயம்போலீஸ் மீது வழக்குஆத்துார், அக். 10-ஆத்துார் அருகே ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் மல்லிகா, 60. இவர் கடந்த, 6 இரவு, 8:00 மணிக்கு ஆத்துார் - ராசிபுரம் மாநில சாலையை கடக்க முயன்றார். அப்போது பைக்கில் வந்தவர், மல்லிகா மீது மோதிவிட்டார். இதில் காயமடைந்த மல்லிகா, ஆத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து மல்லியக்கரை போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தனர். விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை போலீஸ் சங்கரநாராயணன், பைக் ஓட்டிச்சென்றது தெரிந்தது. அவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை