அக்., 2ல் பட்டம் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி குழந்தைகள் கல்விக்கு அடித்தளம் அமைக்கலாம் வாங்க...
சேலம் ;'காலைக்கதிர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் சார்பில், விஜயதசமி நாளான வரும் அக்., 2ல், 'அனா... ஆவன்னா... அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி, சேலம், இடைப்பாடி, கூட்டாத்துப்பட்டி, நாமக்கல் ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. அன்று, உங்கள் குழந்தைகளின் கல்விக்கு அடித்தளம் அமைக்கலாம் என்பதால், பெற்றோரே அழைத்து வாருங்கள்.வீட்டுக்கு, 10 குழந்தைகள் வரை இருந்த காலம் மாறி, ஒன்று, இரண்டுக்கு மேல், தற்போது இருப்பதில்லை. இதனால் அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற அக்கறை அதிகரித்து வருகிறது. அதிலும் பிரகாசமான எதிர்காலத்துக்கு கல்வியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியில் தொடங்கும் நிகழ்வு, வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. அன்று முதன்முதலாக, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, வித்யாரம்பம் நடத்தப்படும். அதன்படி, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும், 'காலைக்கதிர்' நாளிதழ், 'பட்டம்' இதழ் சார்பில், குழந்தைகளின் பிரகாசமான கல்விக்கு, 'அனா.. ஆவன்னா... அரிச்சுவடி ஆரம்பம்' எனும் வித்யாரம்ப நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.நடப்பு ஆண்டு நிகழ்ச்சி, சேலம் பேலஸ் தியேட்டர் எதிரே உள்ள ஏ.வி.ஆர்., கல்யாண மண்டபம்; இடைப்பாடி யுனிவர்சல் பப்ளிக் பள்ளி; வாழப்பாடி, கூட்டாத்துப்பட்டி கேலக்ஸி பள்ளி; நாமக்கல் மாவட்டம் வேப்பநத்தம் நேஷனல் பப்ளிக் பள்ளி ஆகிய இடங்களில், அக்., 2 காலை, 8:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடத்த உள்ளது. இந்நிகழ்ச்சியில், கல்வியாளர்கள், புகழ்பெற்ற பல்துறை பிரபலங்கள், இரண்டரை வயது முதல், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பிஞ்சுவிரல்களை பிடித்து, அனா.. ஆவன்னா எழுதி, அரிச்சுவடி ஆரம்பித்து வைப்பர். இதில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், 1,000 ரூபாய் மதிப்பில் பரிசு பொருட்களுடன், அரிச்சுவடி எழுதும் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும்.இந்நிகழ்ச்சியை சேலம் ஸ்ரீவித்யவாணி வித்யாலயா, இடைப்பாடி யுனிவர்சல் பப்ளிக் பள்ளி, கூட்டாத்துப்பட்டி கேலக்ஸி பள்ளி, வேப்பநத்தம் நேஷனல் பப்ளிக் பள்ளிகள் இணைந்து வழங்குகின்றன.அனுமதி இலவசம்பதிவு அவசியம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பு வோர், குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல் எண், பங்கேற்கும் இடம் ஆகியவற்றை, 98940 09144 என்ற எண்ணுக்கு வாட்ஸாப்பில் தகவலாக அனுப்பலாம். இல்லை எனில், இங்குள்ள, க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம். விபரம் பெற, 95855 47901 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். உங்கள் குழந்தையின் கல்வி, மிகப்பெரிய கல்வியாளர், பல்துறை பிரபலங்களின் கையால் தொடங்கப்படவும், 'காலைக்கதிர்' நடத்தும், இக்குடும்ப விழாவில் பங்கேற்கவும், உடனே பதிவு செய்யுங்கள். அனுமதி இலவசம்