உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அடிப்படை வசதியுடன் சமுதாயக்கூடம் திறப்பு

அடிப்படை வசதியுடன் சமுதாயக்கூடம் திறப்பு

தாரமங்கலம், தாரமங்கலம், எம்.ஜி.ஆர்., காலனியில், 12 ஆண்டுக்கு முன் சமுதாய கூடம் கட்டப்பட்டது. அங்கு கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல், நகராட்சியில் தேவையற்ற பொருட்களை போட்டு வைக்கும் இடமாக இருந்தது.இந்நிலையில் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர, நகராட்சி பொது நிதியில், 7.80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு நகராட்சி தலைவர் குணசேகரன் நேற்று திறந்து வைத்தார். கமிஷனர் பவித்ரா(பொ), கவுன்சிலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை