உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரேஷன் கடை, அங்கன்வாடி திறப்பு

ரேஷன் கடை, அங்கன்வாடி திறப்பு

ஆத்துார், ஆத்துார் ஒன்றியத்தில் கல்பகனுார், அப்பமசமுத்திரம், தென்னங்குடிபாளையம், கல்லாநத்தம், அம்மம்பாளையம் ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை திட்டத்தில் தலா, 13.60 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடைகள் கட்டப்பட்டன. அதேபோல் கல்லாநத்தத்தில், 30 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகம்; துலுக்கனுார் மற்றும் அம்மம்பாளையத்தில் உள்ள நரிக்குறவன் காலனியில், தலா, 14 லட்சம் ரூபாயில், அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டன. இவற்றை, தி.மு.க.,வை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம், நேற்று திறந்து வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலர் செழியன், ஆத்துார் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் ரவிசங்கர், பொது வினியோக திட்ட துணை பதிவாளர் பிரபாகரன், ஆத்துார் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சம்யுக்தா உள்பட பலர் பங்கேற்றனர்.டவுன் பஸ்தலைவாசல் அருகே சிறுவாச்சூரில் இருந்து ஊனத்துார் வழியே சின்னசேலம், கள்ளக்குறிச்சிக்கு, புது தடத்தில் அரசு டவுன் பஸ்(எண்: 10), இயக்க அனுமதிக்கப்பட்டது. அந்த பஸ் இயக்கத்தை, எம்.பி., சிவலிங்கம் தொடங்கி வைத்தார். எம்.பி., மலையரசன், விழுப்புரம் கோட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ