உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சொர்க்கவாசல் திறப்பு உற்சவ முகூர்த்தக்கால் நடல்

சொர்க்கவாசல் திறப்பு உற்சவ முகூர்த்தக்கால் நடல்

சேலம் சேலம், கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு உற்சவத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது. இதனால் உற்சவர் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். காலை, 7:30 முதல், 8:30 மணிக்குள் முகூர்த்தக்கால் நடப்பட்டது.அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேஸ்வரி, அர்ச்சகர் சுதர்சனம், பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு வரும், 31ல், பகல் பத்து தொடங்கி, 10 நாட்கள் நடக்கும்.ஜன., 10ல், ராப்பத்தின் முதல் நாள், பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நடக்கும். பரமபத வாசல் வழியே பக்தர்கள் நுழைந்து வெளியே வந்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த வாசல், 10 நாட்கள் திறந்திருக்கும். அதேபோல் சேலம் மாநகர், மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ