மேலும் செய்திகள்
பெருந்துறையில் தேசியக்கொடி பேரணி
31-May-2025
மேட்டூர்: 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றி பேரணி, பா.ஜ.,வின் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராம் தலைமையில், கொளத்துார் அரசு மருத்துவமனை பிரிவு சாலையில் நேற்று தொடங்கியது. முன்னாள் ராணுவ வீரர்கள், பா.ஜ., நிர்வாகிகள், 65 அடி நீளம் கொண்ட மூவர்ண கொடியை பிடித்து சென்றனர். இந்திய ராணுவத்துக்கும், மத்திய அரசுக்கும் ஆதரவு தெரிவித்து, பா.ஜ., நிர்வாகிகள் கோஷமிட்டனர். போண்டா மார்க்கெட் வழியே சென்ற பேரணி, பஸ் ஸ்டாண்டை அடைந்தது. மாலையில் மேச்சேரி கிழக்கு, மேற்கு, நங்கவள்ளி ஒன்றியம், வீரக்கல்புதுார், பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள், குஞ்சாண்டியூரில் தொடங்கி, ராமன் நகர் வரை பேரணி சென்றனர்.சேலம் மேற்கு மாவட்ட துணை தலைவர் சுதா தலைமையில், சங்ககிரி, சந்தைப்பேட்டையில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, பா.ஜ.,வினர் தேசிய கொடி ஏந்தி சென்றனர். மண்டல தலைவர் தனபால், ஒன்றிய செயலர்கள் சதீஷ்குமார், செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இடைப்பாடி பேரணியில், நகர தலைவர் கார்த்தி தலைமையில் ஒன்றிய செயலர்கள் பழனிசாமி, முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தாரமங்கலம் இந்து இறை தொண்டர்கள் சங்கம் சார்பில், மாநில தலைவர் மாரியப்பன் தலைமையில், தேசியக்கொடி ஏந்தி, அங்குள்ள பெருமாள் கோவிலில் இருந்து சின்னப்பம்பட்டி பஸ் ஸ்டாப் வரை சென்றனர். மாநில செயலர் பழனியப்பன், அமைப்பாளர் செந்தில், மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். அதேபோல் காடையாம்பட்டி, காருவள்ளி சின்னதிருப்பதி அம்மன் கோவில் முன், மக்கள், சமூக ஆர்வலர்கள், தேசிய கொடி ஏந்தி, சந்தை வழியே காருவள்ளி பஸ் ஸ்டாப் வரை சென்றனர்.
31-May-2025