உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டாரஸ் லாரி மோதி பெயின்டர் சாவு

டாரஸ் லாரி மோதி பெயின்டர் சாவு

ஓமலுார்:சேலம், கொண்டலாம்பட்டி, பி.நாட்டாமங்கலத்தை சேர்ந்த, கோவிந்தராஜ் மகன் வீரசிம்மன், 34. பெயின்டரான இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று காடையாம்பட்டி, சந்தைத்தடம் பகுதியில் வேலைக்கு சென்றார். அங்கு மதியம், 3:15 மணிக்கு, தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையை, நடந்து கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த டாரஸ் லாரி மோதியதில், சம்பவ இடத்தில் வீரசிம்மன் உயிரிழந்தார். உடலை கைப்பற்றி தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி