உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருமணத்துக்கு சென்றபோது மாணவியை தடுத்த பெற்றோர்

திருமணத்துக்கு சென்றபோது மாணவியை தடுத்த பெற்றோர்

தலைவாசல்: பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை, கள்ளிப்பட்டியை சேர்ந்த சேகர் மகள் பவித்ரா, 19. சேலம் மாவட்டம் தலைவாசல், வி.கூட்ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., கணினி அறிவியல் முதலாண்டு படிக்கிறார். தலைவாசல் அருகே, வீரகனுார், அண்ணா நகரை சேர்ந்த, ராஜா மகன் அஜய், 21. பெயின்டரான இவரும், பவித்ராவும் காதலித்தனர். இதை அறிந்து, மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியேறிய பவித்ரா, வீரகனுார் வந்தார். தொடர்ந்து நேற்று காலை, 8:00 மணிக்கு பவித்ரா, அஜயை திருமணம் செய்து கொள்ள, வீட்டில் இருந்து சென்றார். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள், பவித்ரா மற்றும் காதலனை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்தனர். இதை அறிந்து, வீரகனுார் போலீசார் அங்கு வந்து, காதல் ஜோடியை, ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். பின் இரு வீட்டு பெற்றோரை அழைத்து பேச்சு நடத்தினர். அப்போது மாணவி, பெற்றோருடன் செல்ல மறுத்ததால், அஜயுடன், பவித்ராவை அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை