அடுத்தடுத்து சிக்கும் புகையிலை ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும்
ஓமலுார்: பெங்களூருவில் இருந்து சேலம் மாவட்டம், ஓமலுார் வழியே புகையிலை கடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் காலை, காமலா-புரத்தில் ஓமலுார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இரு கார்களில், 300 கிலோ புகையிலை இருந்தன. இதனால் அந்த கார்களில் வந்த, 3 பேரை, போலீசார் கைது செய்-தனர்.தொடர்ந்து அன்று இரவு, 8:00 மணிக்கு ஆர்.சி.செட்டிப்பட்டி அருகே கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த, வோக்ஸ்வேகன் காரை போலீசார் சோதனை செய்தனர். அதில், 3.21 லட்சம் ரூபாய் மதிப்பில் இருந்த புகையிலை மூட்டைகளை கைப்பற்றி காரை பறிமுதல் செய்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் காமலாபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பெங்களூருவில் இருந்து வந்த, 'சைலோ' காரை சோதனை செய்ததில், 203 கிலோ புகையிலை இருந்தது. காரில் வந்த, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கருவேப்பம்பட்டியை சேர்ந்த நவீத், 35, என்பவரை, போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். அடுத்தடுத்து புகை-யிலை கடத்தி வரும் வாகனங்கள் சிக்குவதால், ரோந்தை தீவிரப்-படுத்தினால், புகையிலை கடத்தலை கட்டுப்படுத்தலாம்.