ஆட்டையாம்பட்டியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிப்பு
ஆட்டையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி பேரூராட்சி, முதல் வார்டுக்கு உட்பட்ட தானகுட்டிபாளையம் பகுதியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்நிலையில் இந்த பகுதியில், 10 தெரு விளக்கு கள் மட்டுமே உள்ளன. இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன.மேலும் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. கடந்த இரு மாதமாக சாக்கடையை துார்வாராத காரணத்தால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாவதால், மக்கள் நிம்மதியாக துாங்க முடியாமல் தவிக்கின்றனர். அதே வார்டில் மாரியம்மன்கோயில் வீதியில், 20 வீடுகள் மேடான பகுதியில் உள்ளதால், குடிநீர் குழாயில் நீரேற்றம் நடைபெறவில்லைஇதனால் மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அந்த பகுதியில் மினி தொட்டி அமைத்து தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.