உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீடு புகுந்த திருடன் மக்கள் பிடித்து கவனிப்பு

வீடு புகுந்த திருடன் மக்கள் பிடித்து கவனிப்பு

வீடு புகுந்த திருடன்மக்கள் பிடித்து 'கவனிப்பு'சேலம், நவ. 28-சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே அங்கம்மாள் காலனி முதலாவது கிராஸில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு நவீன் என்பவரது வீட்டில், நேற்று காலை மர்ம நபர் புகுந்தார். அப்போது அருகே வசிப்பவர்கள், அவரை பிடித்து விசாரித்ததில் திருட வந்தது தெரிந்தது. இதனால் அவருக்கு, தர்ம அடி கொடுத்து, பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், வாலிபரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில், திருச்சி, மணப்பாறையை சேர்ந்த பிரபு கார்த்திக், 29, என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. தொடர்ந்து அவரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை