மேலும் செய்திகள்
2 மாதத்தில் பெயர்ந்துபோன சாலை
18-Oct-2025
ஆத்துார், நரசிங்கபுரம் நகராட்சி நபிகள் நாயகம் தெருவை சேர்ந்த ஒருவர், வீடு அருகே, 20 அடி உயரத்துக்கு மேல், விதி மீறி தடுப்புச்சுவர் அமைப்பதாகவும், அதனால் மின் பாதையில் விபரீதம் ஏற்படும் நிலை உள்ளதாக, அப்பகுதி மக்கள், புகார் அளிக்க, நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். ஆனால் அங்கிருந்த அலுவலர்கள், மனுவை பெறாமல் அலைக்கழித்ததாக கூறி, மக்கள், அலுவலகம் முன், தர்ணாவில் ஈடுபட்டனர். நகர அமைப்பு ஆய்வாளர் செல்வராஜ், மக்களிடம் பேச்சு நடத்தினார். தொடர்ந்து மனுவை பெற்றுக்கொண்ட அவர், ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூற, மக்கள் கலைந்து சென்றனர்.
18-Oct-2025