ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நெடுஞ்சாலையில் மக்கள் மறியல்
மேட்டூர்: மேட்டூர் கிழக்கு பிரதான சாலை வழியே சேலம், ஈரோட்டுக்கு பஸ், சரக்கு வாகனங்கள் செல்கின்றன. அப்பகுதியில் மேட்டூர் நகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. பள்ளி எதிரே உள்ள சாலையோரம் துாக்கனாம்பட்டி காளியம்மன் கோவில் உள்ளது. அக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டிவிட்டனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, நேற்று காலை, 10:45 மணிக்கு, மேட்டூர் - சேலம் நெடுஞ்சாலையில் அமர்ந்து, மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.கோவில் செயல் அலுவலர் மாதேஸ்வரன்(பொ), மேட்டூர் போலீசார் பேச்சு நடத்தி அளவீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால், ஒரு மணி நேர மறியலை கைவிட்டனர். இருப்பினும் வாகனங்கள் பஸ் ஸ்டாப் வழியே சுற்றி சென்றதால் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், 'தை மாதம் கோவில் பண்டிகை நடக்கும். இப்பிரச்னையால், பண்டிகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கும்பாபி ேஷகம் கடந்த ஆண்டு நடத்தியிருக்க வேண்டும். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவிலை புதிதாக கட்டிய பின் கும்பாபிேஷகம் நடத்துவோம்' என்றனர்.