ஏரி ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றாமல் அலட்சியம் மாநகராட்சி நிர்வாகம் மீது மக்கள் வருத்தம்
சேலம்: நீதிமன்றம் உத்தரவிட்டு இரு ஆண்டுகளுக்கு மேலாகியும், பள்-ளப்பட்டி ஏரி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல், அதி-காரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சேலம் மாநகராட்சி, 25வது வார்டில் உள்ள பள்ளப்பட்டி ஏரி, 44 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏரியை சீர்மிகு நகர திட்டத்தில், 35 கோடி ரூபாயில் சீரமைத்து கால்வாய் அமைத்தல், மினி பூங்கா, நடைபாதை, கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணி மேற்-கொள்ளப்பட்டது. இதற்காக, ஏரி புறம்போக்கு நிலத்தில் ஆக்கிர-மிப்பு செய்யப்பட்டிருந்த, 100க்கும் மேற்பட்ட வீடுகளை உடன-டியாக அகற்ற, 2022ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டிய பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மட்டும் மாநகராட்சி அகற்றியது. கடந்த நவ.,18ல் மாநகராட்சி பணியாளர்கள் மீண்டும் பல வீடு-களை அகற்றினர். அப்போது கோவில் மற்றும் அதை ஒட்டியுள்ள வீடுகளை, 15 நாட்களுக்குள் அகற்றிக்கொள்ள அவகாசம் அளிக்-கப்பட்டது. இன்னும், 10க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்ப-டாமல் உள்ளது. ஆனால், ஏரி பணி நிறைவடைந்து, பயன்பாட்-டுக்கு திறக்கப்பட்ட பின்னும், ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இதுகுறித்து கடந்த ஜன., 31ல் நடந்த மாமன்ற கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 'பள்ளப்பட்டி ஏரி ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றாதது ஏன்?' என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செயற்பொறியாளர் பழனிசாமி, 'வருவாய் துறையினர்தான் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், கடிதம் வைத்-துள்ளோம்' என்றார். கூட்டம் முடிந்து மூன்று வாரங்களாகியும், இதுவரை ஆக்கிரமிப்பை அகற்றப்படவில்லை. ஏரி ஆக்கிரமிப்பு-களை முழுமையாக அகற்றி, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், பூங்கா அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, வார்டு கவுன்சிலர் சசிகலா (அ.தி.மு.க.,) மற்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.