உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செம்மண் ஏற்றிய வேன்கள் தடுத்து நிறுத்திய மக்கள்

செம்மண் ஏற்றிய வேன்கள் தடுத்து நிறுத்திய மக்கள்

செம்மண் ஏற்றிய வேன்கள்தடுத்து நிறுத்திய மக்கள்மேட்டூர், நவ. 15-கொளத்துார் டவுன் பஞ்சாயத்து, சின்னமேட்டூர் சென்றாய பெருமாள் கோவில் அடிவாரம் பழமையான ஏரி உள்ளது. அங்கு தமிழ்நாடு நீர்நிலைகள் மேம்பாடு அம்ரூத், 2.0 திட்டம், 2023 -24ம் ஆண்டு, 98 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு செய்து கரைகள், மதகுகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. குறிப்பாக ஏரியில் உள்ள செம்மண்ணை கொட்டி கரை உயர்த்தப்பட்டுள்ளது. மீதி மண்ணை சிலர் சட்டவிரோதமாக ஏரியில் இருந்து வேனில் ஏற்றி சுற்றுப்பகுதி விவசாயிகளுக்கு விற்பதாக புகார் எழுந்தது.இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதி மக்கள் சிலர், ஏரியில் செம்மண் ஏற்றிய இரு வேன்களை தடுத்து நிறுத்தினர். கொளத்துார் போலீசார், அங்கு சென்று சமாதானப்படுத்தி, செம்மண் ஏற்றிய வேன்களை விடுவித்தனர். இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வேனில் செம்மண் அள்ளி செல்பவர்கள் முறையாக அனுமதி பெற்றுள்ளனரா என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரிக்க, மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை