உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் கொட்டிய மழையால் மக்கள் அவதி

சேலத்தில் கொட்டிய மழையால் மக்கள் அவதி

சேலம்: சேலத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:30 மணிக்கு மாநகரில் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்க, அரசு ஊழியர்கள், மக்கள் அவதிப்பட்டனர். அங்கு மழைநீர் தேங்கும்போது எல்லாம், மின்மோட்டார் மூலம் உறிஞ்சி சரி செய்யப்படுகிறது. ஆனால் நிரந்தர தீர்வு காண, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.போலீசாருக்கு பாராட்டுஇதனிடையே கிச்சிப்பாளையம், எருமாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக காந்தி சிலை அருகே சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீர் கலந்து மழைநீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வர தாமதம் ஆனது. இந்நிலையில் டவுன் போலீசார் அங்கு வந்து மழையை பொருட்படுத்தாமல் சாக்கடையில் இறங்கி கால்வாயில் உள்ள அடைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை, மக்கள் பாரட்டினர். அதேநேரம் அழகாபுரம், தெரசா நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளில் முடங்கினர். பள்ளி குழந்தைகளை கூட அனுப்ப முடியாமல் பெற்றோர் தவித்தனர். அதேபோல் கலெக்டர் அலுவலகம் அருகே பிரட்ஸ் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது தொடர் மழையால் அச்சாலை மேலும் சீரழிந்து வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். இச்சாலையை சீரமைப்பதில், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக, மக்கள் குற்றம்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை