உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போராட அனுமதி: கமிஷனர் கிடுக்கி

போராட அனுமதி: கமிஷனர் கிடுக்கி

சேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு அறிக்கை:சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்-கூட்டம் உள்ளிட்டவற்றை, போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்ற பின்பே நடத்த வேண்டும். அதற்கு குறைந்தபட்சம், 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட-மாட்டாது. விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம் உள்-ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது. ஜன., 18 முதல் பிப்., 1 நள்ளிரவு வரை, இந்த உத்தரவு அமலில் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை