உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அமித்ஷாவை தரக்குறைவாக பேசிய ஆ.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி எஸ்.பி.,யிடம் மனு

அமித்ஷாவை தரக்குறைவாக பேசிய ஆ.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி எஸ்.பி.,யிடம் மனு

சேலம், சேலம் மேற்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் ஹரிராமன், 50. இவர் நேற்று, 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தரக்குறைவாக பேசிய, 1.76 லட்சம் கோடி 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட, நீலகிரி தி.மு.க.,எம்.பி., ஆ.ராஜாவை கைது செய்யக்கோரி, 2ஜி ஸ்டிக்கர்களை கழுத்தில் மாலையாக அணிந்தும், நெற்றி, கன்னங்களில் ஒட்டியபடியும் வந்து, சேலம் எஸ்.பி., கவுதம் கோயலிடம் மனு கொடுக்க வந்தனர்.மனுவில் கூறியிருந்ததாவது:கடந்த 24ம் தேதி சென்னையில் நடந்த, தி.மு.க., பூத் கமிட்டி கூட்டத்தில், நீலகிரி எம்.பி., ஆ.ராஜா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 'முட்டாள்' என, இரண்டு முறை தரக்குறைவாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள், திட்டமிட்டு சமூக வலைதளங்களில் தி.மு.க.,வினரால் பகிரப்பட்டு வருகிறது. இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதோடு, எம்.பி.,பதவிக்குரிய மாண்பை மீறி, தேச விரோதமாக நடந்து கொண்ட எம்.பி., ராஜாவை கைது செய்து, சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.2ஜி ஸ்டிக்கர்களுடன், பா.ஜ.க.,வினர் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி