உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தை 3 ஆக பிரிக்க பா.ம.க., வலியுறுத்தல்

சேலத்தை 3 ஆக பிரிக்க பா.ம.க., வலியுறுத்தல்

சேலம், டிச. 15-------பா.ம.க.,வின், சேலம் மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று நடந்தது. அதில் கவுரவ தலைவர் மணி பேசினார். தொடர்ந்து, வரும், 21ல் திருவண்ணாமலையில் நடக்க உள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. எம்.எல்.-ஏ.,க்கள் அருள், சதாசிவம், மாவட்ட தலைவர் ராசரத்தினம் உள்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து மணி கூறியதாவது:மேட்டூர் அணை உபரிநீர் வீணாகாமல், சேலம் மாவட்டம் முழுதும் பயன்பெறும்படி, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட ஏரிகளை நிரப்ப வேண்டும். அண்மையில் மழை வெள்ளத்தால் திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் சேதமடைந்தன. சென்னைக்கு என்றால், 6,000, பிற பகுதிகள் என்றால், 2,000 ரூபாய் தான் அரசு அறிவிக்கிறது. இதுவும் முறையாக அனைவரையும் சென்றடையவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 6,000 ரூபாய் வழங்க வேண்டும். அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய, பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும். அதன்படி சேலம் மாவட்டத்தை, 3 ஆக பிரிக்க வேண்டும். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நல்ல திட்டம் தான். நடைமுறையில் சிக்கல்கள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை