மேலும் செய்திகள்
பள்ளி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'
27-Apr-2025
ஓமலுார்:புதுச்சேரி வாகைக்குளத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படித்து வருகிறார். சமூக வலைதளம் மூலம், சேலம் மாவட்டம், தொளசம்பட்டியில் உள்ள, மணிகண்டன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் மணிகண்டனை தேடி கடந்த, 2024 டிசம்பரில் சிறுமி தொளசம்பட்டிக்கு வந்துள்ளார். பின் சிறுமியுடன் ஓமலுாரில் உள்ள ேஹாட்டலில் தங்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றம் குறித்து, அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிகிச்சையில் இருந்த போது கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.இது குறித்து, முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். விசாரணையில் சம்பவம் சேலத்தில் நடந்துள்ளதால் வழக்கை, சேலம் மாவட்ட எஸ்.பி.,க்கு அனுப்பியுள்ளனர். இவ்விவகாரம் குறித்து, ஓமலுார் மகளிர் போலீசார் விசாரிக்க, சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் உத்தரவிட்டார். இதன்படி, மகளிர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு, தொளசம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
27-Apr-2025