உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துாய்மை பணியாளர்கள் சாலை மறியல் குண்டுக்கட்டாக துாக்கிய போலீஸ்

துாய்மை பணியாளர்கள் சாலை மறியல் குண்டுக்கட்டாக துாக்கிய போலீஸ்

சேலம்,சேலம், கோட்டை மைதானத்தில், செந்தாரகை தொழிலாளர் சங்கம், இடதுசாரி கூட்டியக்கம் சார்பில், ஒருங்கிணைப்பாளர்கள் பூபதி, பொன்சரவணன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்த திரண்டனர். ஆனால் டவுன் போலீசார் அனுமதி மறுத்தனர். இதை மீறி துாய்மை பணியாளர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். போலீசார் பேச்சு நடத்திய நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட, 34 பெண்கள் உள்பட, 80 பேரை, குண்டுக்கட்டாக துாக்கி, போலீசார் கைது செய்து, அதே பகுதியில் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின் மாலையில் விடுவித்தனர்.நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் முன், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில செயலர் செந்தில்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் துாய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு, தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.மேட்டூரில், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்க சி.ஐ.டி.யு., மேட்டூர் நகராட்சி கிளை சார்பில், துாய்மை பணியாளர்கள், 50க்கும் மேற்பட்டோர், அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் இருந்து, நகராட்சிக்கு பேரணியாக சென்றனர். அப்போது, 10 ஆண்டுக்கு மேல் பணிபுரியும், நகராட்சி ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின் நகராட்சி அலுவகலம் முன், சி.ஐ.டி.யு., நகராட்சி கிளை தலைவர் இளங்கோ தலைமையில், செயலர் கருப்பண்ணன் உள்பட பலர், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை