மேலும் செய்திகள்
பொதுமக்கள் - போலீஸ் நல்லுறவு ரோந்து
24-Jul-2025
கருமந்துறை, பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த கருமந்துறை, மணியார்குண்டம், சூலாங்குறிச்சி, கரியகோவில் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில், கருமந்துறை போலீசார் சார்பில், போலீசார் - மக்கள் இடையே நல்லுறவு ஏற்பட கோலம், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. அதில் இளைஞர்கள், பெண்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வாழப்பாடி டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். மேலும் போலீசாருக்கு, மக்கள் எந்த வகையில் உதவுவது; போலீசார், மக்களிடம் நடந்து கொள்ளும் முறை; மக்கள் பிரச்னைகளுக்கு போலீசார் தீர்வு காணும் முறை குறித்து கருத்து கேட்கப்பட்டது. கருமந்துறை இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
24-Jul-2025