உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீஸ் பயன்படுத்தும் துப்பாக்கிகள் ஆய்வு

போலீஸ் பயன்படுத்தும் துப்பாக்கிகள் ஆய்வு

சேலம், சேலம் மாவட்டம், மாநகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன், ஆயுதப்படை, வனத்துறையினர் உள்ளிட்ட போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகளில், 3ல் ஒரு பங்கு துப்பாக்கிகள், சேலம், குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டன.தொடர்ந்து சென்னை, சிறுபடை கலன் பிரிவு உதவி கமிஷனர் கருப்புசாமி, 303, இன்சாஸ், பிஸ்டல் உள்பட, 500க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை பார்வையிட்டார்.தொடர்ந்து கருப்புசாமி கூறுகையில், ''துப்பாக்கிகளில் குறைபாடு உள்ளதா, செயல்பாடு சீராக உள்ளதா, முறையாக பராமரிக்கப்படுகிறதா என கண்டறியப்படும். குறை இருந்தும் சரிசெய்ய முடியாமல் இருக்கும் துப்பாக்கிகளை, பயன்படுத்த முடியாது என கருதி சென்னைக்கு அனுப்பப்படும்,'' என்றார்.ஆயுதப்படை டி.எஸ்.பி., இளங்கோவன், இன்ஸ்பெக்டர் ராமராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை