உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீஸ் வீட்டில் நகை திருட்டு ஹவுஸ் ஓனர் மகனுக்கு காப்பு

போலீஸ் வீட்டில் நகை திருட்டு ஹவுஸ் ஓனர் மகனுக்கு காப்பு

தாரமங்கலம், சேலம் மாவட்டம் தாரமங்கலம், வனிச்சம்பட்டியை சேர்ந்தவர் சுஷ்மிதா, 29. தையல் தொழிலாளி. இவரது கணவர் செல்வம், 38. திருப்பூரில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இவர்கள் வனிச்சம்பட்டியில், அண்ணாமலை என்பவரது வீட்டில், வாடகைக்கு வசிக்கின்றனர். அதே வீட்டின் ஒரு அறையில் அண்ணாமலை மகன் கோபி, 34, வசிக்கிறார்.கடந்த ஜூலை, 21 காலை, 9:45 மணிக்கு, சுய உதவி குழுவுக்கு, தாரமங்கலம் வங்கியில் பணம் செலுத்த, சுஷ்மிதா சென்றார். திரும்பி, 11:30க்கு வீட்டுக்கு வந்தார். அப்போது பீரோவில் இருந்த வாக்காளர் அட்டையை தேடியபோது, அங்கிருந்த கால் பவுன் கொண்ட இரு தோடு, வெள்ளி அரைஞாண் கயிறு காணாமல் போனது தெரிந்தது.இதுகுறித்து சுஷ்மிதா புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரித்தனர். அப்போது, கோபி மீது சந்தேகம் உள்ளதாக, சுஷ்மிதா தெரிவித்தார். அவரிடம் போலீசார் விசாரித்ததில், திருடியதை ஒப்புக்கொண்டார். நகையை மீட்ட போலீசார், கோபியை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை