உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மதுக்கடை அமைக்க எதிர்ப்பு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

மதுக்கடை அமைக்க எதிர்ப்பு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

ஆட்டையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி, பாப்பாரப்பட்டி ஊராட்சி ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் பிரதான சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடையை, மேட்டுக்கடையில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்துக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. அப்பகுதியில் அரசு துவக்கப்பள்ளி, ரேஷன் கடை, பெருமாள் கோவில் உள்ளிட்டவை உள்ளதால், அப்பகுதி மக்கள், கடந்த, 1ல், அங்கு மதுக்கடை வைக்கக்கூடாது என சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடையை இடமாற்ற மீண்டும் முயற்சி நடப்பதை அறிந்த மக்கள், நேற்று காலை, ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, மனு அளித்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !