உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.800 உயர்வு

சேலத்தில் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.800 உயர்வு

சேலம்: சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்படும். அதன்படி சேலத்தில் நேற்று முன்தினம் தங்கம் கிராம், 8,175, பவுன், 65,400 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிராமுக்கு, 100, பவுனுக்கு, 800 ரூபாய் உயர்ந்தது. அதன்படி கிராம், 8,275, பவுன், 66,200 ரூபாய்க்கு விற்பனையானது.அதேபோல் நேற்று முன்தினம் வெள்ளி கிராம், 107, கிலோ வெள்ளி, 1,07,000 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிராமுக்கு, 3 ரூபாய், கிலோவுக்கு, 3,000 ரூபாய் உயர்ந்தது. அதன்படி கிராம், 110, கிலோ வெள்ளி, 1,10,000 ரூபாய்க்கு விற்பனையானது.இதுகுறித்து நகை கடைக்காரர்கள் கூறுகையில், 'அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பு கொள்கை, சில நாடுகள் இடையேயான போர், பொருளாதார நிலை ஆகியவற்றால், தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பால் விலை உயர்ந்து வருகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை