உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழில் வரியை கைவிடக்கோரி விசைத்தறியாளர் ஆர்ப்பாட்டம்

தொழில் வரியை கைவிடக்கோரி விசைத்தறியாளர் ஆர்ப்பாட்டம்

சேலம் : சேலம், கோட்டை மைதானத்தில், மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின், சி.ஐ.டி.யு., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட உதவி தலைவர் வெங்கடபதி தலைமை வகித்தார்.பொதுச்செயலர் பொன்.ரமணி பேசுகையில், ''சேலம் மாநகர் பகுதியில் பெரும்பாலோர், வீடுகளில் விசைத்தறி இயந்திரத்தை நிறுவி ஜவுளி உற்பத்தி செய்து, குடும்பம் நடத்துகின்றனர். மாநகராட்சி நிர்வாகம், விசைத்தறி கூடத்துக்கு சதுரடிக்கு, 27 ரூபாய் வரி விதிப்பை அமல்படுத்துவதால், விசைத்தறி தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஏற்கனவே, ஜி.எஸ்.டி., சூரத் ஜவுளி விற்பனையால் விசைத்தறி தொழில் நலிந்துள்ள நிலையில், தொழில் வரி விதிப்பால் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை இழக்க செய்துவிடும் என்பதால், புது தொழில்வரி விதிப்பை மாநகராட்சி கைவிட வேண்டும்,'' என்றார்.துணைத்தலைவர் பச்சமுத்து, சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் இளங்கோ உள்பட விசைத்தறி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ