உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தங்கம் வென்றவருக்கு தலைவர் பாராட்டு

தங்கம் வென்றவருக்கு தலைவர் பாராட்டு

தாரமங்கலம், டிச. 13-தாரமங்கலம் அருகே மேல் சின்னாகவுண்டம்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மனோஜ்குமார், 21. இவர், தேசிய கம்போடியா பாராலிம்பிக் சங்கம், அந்நாட்டில் நடத்திய சர்வதேச பாரா த்ரோபால் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார். அதில் தங்கம் வென்ற நிலையில், கடந்த, 9ல் மனோஜ்குமார், சொந்த ஊர் திரும்பினார். அவரை, தாரமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று, நகராட்சி தலைவர் குணசேகரன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். துணைத்தலைவர் தனம், தி.மு.க.,வினர் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ