மேலும் செய்திகள்
அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
07-Jun-2025
சேலம், சேலம், குகை ஆத்தோர தெரு பகுதியை சேர்ந்தவர் மணி, 28. இவரை திருட்டு வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார், சில மாதங்களுக்கு முன் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மணி மீது ஏற்கனவே, 2018ல், பொன்னம்மா பேட்டை பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றுக்கு, நேற்று மாநகர ஆயுதப்படை போலீசார் மத்திய சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணைக்காக அழைத்து வந்தனர்.அப்போது மணிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விசாரணை கைதி மணி, நீதிமன்ற வளாகம் முன் இருந்த கண்ணாடி கதவை உடைத்து ரகளையில் ஈடுபட்டார். கண்ணாடி உடைந்ததில் மணியின் கையில் இருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து போலீசார் மணியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
07-Jun-2025