மேலும் செய்திகள்
ரசாயன நிறுவனங்களில் மதுவிலக்கு போலீஸ் ஆய்வு
07-Jun-2025
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும், சாய ஆலைகளில் ரசாயனங்கள் பயன்பாடு குறித்து, திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் ஆய்வு செய்தனர்.நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் தனராசு தலைமையில், திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் நேற்று பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளில் பயன்படுத்தி வரும் ரசாயனங்கள், கெமிக்கல்ஸ் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள ரசாயனங்கள், கெமிக்கல் தணிக்கை செய்யப்பட்டது. எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் விசாரித்தனர்.
07-Jun-2025