மேலும் செய்திகள்
நாய்க்கு சைவம் நல்லதா?
11-Sep-2025
சேலம், முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம், நேற்று சேலம் மாவட்டத்தில், 12.29 கோடி ரூபாய் மதிப்பிலான, 5 திட்டப்பணிகளை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.அதன்படி, சேலம் அம்மாபேட்டை உணவு பகுப்பாய்வு ஆய்வகத்தில் பயன்பாட்டுக்கு வந்த, 8.5 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன உயர்ரக உபகரணங்களை அமைச்சர் ராஜேந்திரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்பின் அவர் கூறியதாவது:அதிநவீன உபகரணங்கள் மூலம், உணவு பொருட்களில் கலந்துள்ள பயிர் மாசுகள் முறையே பூச்சி கொல்லிகள், பூஞ்சானங்கள், பிற நச்சு பொருட்கள் ஆகியவற்றை மிக துல்லியமாக கண்டறிந்து, உணவு பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த முடியும். மேலும், சுற்றுச்சூழலில் காணப்படும் மனித ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் ஆர்செனிக் ஈயம், பாதரசம், குரோமியம் போன்ற உலோக மாசுகளையும் துல்லியமாக கண்டறிய உதவும்.ஓமலுார் அடுத்த மாட்டுக்காரனுார் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளிக்கு 98 லட்ச ரூபாய் மதிப்பில் வகுப்பறை கட்டடம், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாடு திட்டத்தில் வாழப்பாடி அடுத்த காரிப்பட்டியில், 1.27 கோடி ரூபாய் மதிப்பில் கிராம அறிவுசார் மையம், வெள்ளாளகுண்டம் கிராமத்தில், 77.89 லட்ச ரூபாய் மதிப்பில் கிராம அறிவுசார் மையம், கெங்கவல்லி அடுத்த நடுவலுாரில் 77.89 லட்ச ரூபாய் மதிப்பில் கிராம அறிவுசார் மையம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.இவ்வாறு கூறினார். கலெக்டர் பிருந்தாதேவி, எம்.பி., செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினர் சிவலிங்கம், மேயர் ராமச்சந்திரன், உணவு பகுப்பாய்வாளர் நரசிம்மன், அம்மாபேட்டை மண்டலகுழு தலைவர் தனசேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.
11-Sep-2025