மேலும் செய்திகள்
முதல்வர் தம்பி தமிழரசு 'அட்மிட்'
21-Aug-2025
முதல்வர் தம்பி தமிழரசு 'அட்மிட்'
21-Aug-2025
சேலம், சேலம், சாமிநாதபுரம், அல்ராஜ் தெருவை சேர்ந்தவர் தமிழரசு, 43. கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்கிறார். அதே பகுதியில், 10 வீடுகளை வாடகைக்கு விட்டு தொழில் செய்கிறார். நேற்று அதே பகுதியை சேர்ந்த, 8 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார். அவரை, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்துக்கு அழைத்துச்சென்ற தமிழரசு, சில்மிஷம் செய்துள்ளார். அச்சமடைந்த சிறுமி, அங்கிருந்து ஓடினார். இதுகுறித்து சிறுமியுடன் விளையாடிய சிறுவன் பார்த்து, அச்சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின் சிறுமியின் பெற்றோர் புகார்படி, சூரமங்கலம் மகளிர் போலீசார், தமிழரசுவை பிடித்து விசாரித்தனர். பின் அவரை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.முதியவருக்கு 'காப்பு'அதேபோல் சேலம், கிச்சிப்பாளையம், கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்தவர் அர்ச்சுணன், 64. அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். அவர், அங்கு வந்த, 10 வயது சிறுமியிடம், சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் புகார்படி, சேலம் டவுன் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் நேற்று, அர்ச்சுணனை கைது செய்தனர்.
21-Aug-2025
21-Aug-2025