மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி/ ஜூன் 25 க்குரியது
24-Jun-2026
சேலம்; சேலத்தில், ரயில்வே கூட்செட், பனங்காடு இந்-திய உணவு கழகம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு, லீ பஜார் உள்ளிட்ட இடங்களில், லாரிகளில் அதி-கபாரம் ஏற்றி இயக்கும் அதன் உரிமையாளர்-களை கண்டித்து, கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.வி.சி.க., கிறிஸ்தவ சமூகநீதி பேரவை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை செயலர் ஜான்பீட்டர் தலைமை வகித்தார். ஜங்ஷன் ரயில்வே கூட்செட்டில், 19 டன்னுக்கு பதிலாக, 25 டன் ஏற்றுவதை தடுக்க வேண்டும்; காலை, 7:00 முதல் 11:00 வரை, மாலை, 4:00 முதல் இரவு, 7:00 வரை, கனரக வாகனங்களை மாநகர் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது. ஓட்டுனர்கள் முறையான உரிமம் வைத்திருக்க வேண்டும். சீருடை இன்றி லாரிகளை இயக்க தடை விதித்தல் போன்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்-டனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நிர்வாகிகள் அசோக்குமார், முருகேசன், பிரபாவளவன், மொழியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
24-Jun-2026