உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மோதலால் மறியல்: 4 பேர் மீது வழக்கு

மோதலால் மறியல்: 4 பேர் மீது வழக்கு

வாழப்பாடி, வாழப்பாடி, பேளூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, அம்மன் வீதி உலா நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது, பேளூர் - கண்ணனுார் நகர் இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டனர். கண்ணனுார் நகரை சேர்ந்த இளைஞர்களை, பேளூர் இளைஞர்கள் தாக்கினர். இதில் கண்ணனுார் நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த், பூபதி காயம் அடைந்த நிலையில், அவர்களை மக்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இந்நிலையில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி, கண்ணனுார் மக்கள், பேளூர் - வாழப்பாடி நெடுஞ்சாலையில், நேற்று காலை, 8:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடி போலீசார் பேச்சு நடத்திய பின், மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஸ்ரீகாந்த் புகாரில், பேளூரை சேர்ந்த அபி, டாங்கிலி, பார்த்தசாரதி, தரணி மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை