உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்பியா சார்பில் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்பியா சார்பில் போராட்டம்

சேலம், சேலம் கோட்டை மைதானத்தில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் (டாக்பியா) சங்க சேலம் மாவட்ட கிளை சார்பில், 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: பணியாளர்கள் அனைவருக்கும், 20 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, 5,000 ரூபாய் ஓய்வூதியம் தேவை. கணினி, நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்தல். சரியான எடையளவில் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்க வேண்டும். பெண் விற்பனையாளர்களுக்கு, எடையாளரை நியமிக்க வேண்டும். சொந்த ஊருக்கு அருகாமையில் ரேஷன் விற்பனையாளருக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது. மேலும் இன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்கிறோம்.இவ்வாறு பேசினார்.அதன்பின், கோரிக்கை மனு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. மாவட்ட செயலர் தமிழழகன், பொருளாளர் குமார், துணைத்தலைவர்கள் ரகுராமன், குமார், இணை செயலர்கள் தியாகராஜன், முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி