உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பதவி உயர்வுக்கு புது சட்டம் கொண்டு வர ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வுக்கு புது சட்டம் கொண்டு வர ஆர்ப்பாட்டம்

சேலம், மத்திய, மாநில அரசு அனைத்து துறை எஸ்.சி., - எஸ்.டி.,பணியாளர் கூட்டமைப்பு சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்ட அரசு ஊழியர் சங்க ஐக்கிய பேரவை தலைவர் குமார் தலைமை வகித்தார்.அதில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, எஸ்.சி., - எஸ்.டி., அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க புது சட்டம் கொண்டு வருதல்; மற்ற மாநிலங்களை போன்று, அனைத்து பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு வழங்க, அரசமைப்பு சட்டப்பிரிவு 16(4ஏ)ஐ,தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தினர். கூட்டமைப்பு நிர்வாகிகள் பாவாணன், குமார் உள்பட, 29 சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை