உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் தற்காலிக பராமரிப்புக்கு ஏற்பாடு

துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் தற்காலிக பராமரிப்புக்கு ஏற்பாடு

சேலம்,: தொடக்க கல்வித்துறையின் கீழ் துவக்க, நடுநிலைப்பள்ளி-களில், பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டிருந்தாலும், நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதால், பராமரிப்பு மேற்கொள்-வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் சேதமான கட்டடங்களையும் சரி செய்ய முடியாத நிலை பல பள்ளிகளில் உள்ளன.அனைத்து அரசு பள்ளிகளையும் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, உத்தரவிடப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில், 1,487 துவக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட செயற்பொறியாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, தற்காலிக பராமரிப்பு தேவைப்படும் பள்ளி குறித்த விப-ரங்களை, இயக்குனரகத்துக்கு அனுப்பி வைப்பர். இந்த ஆய்வில், பள்ளி கட்டட கூரை, சுவர், தரைதளம் ஆய்வு செய்யப்-படும் என்று, தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ