அதிநவீன தீயணைப்பு வாகனம் வழங்கல்
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா பிரிக்கப்பட்ட பின், அங்கு புதிதாக தீயணைப்பு நிலையம் உருவாக்கப்பட்டது. ஆனால் பழைய தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்தினர். இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன் காடையாம்பட்டிக்கு அதிநவீன புது தீயணைப்பு வாகனம் வழங்கப்பட்டது. அதன் மதிப்பு, 56.40 லட்சம் ரூபாய். அதேபோல் நங்கவள்ளி தீயணைப்பு நிலையத்துக்கும் புது வாகனம் வழங்கப்பட்டுள்ளது.