உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோழியை லபக்கி மயங்கிய மலைப்பாம்பு

கோழியை லபக்கி மயங்கிய மலைப்பாம்பு

நாட்றம்பள்ளி, பண்ணையில் கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது.திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம், 40; கோழிப்பண்ணை வைத்துள்ளார். நேற்று காலை பண்ணையில் கோழிகளின் அதிக சத்தத்தை கேட்டு சென்று பார்த்தார். ஒரு மலைப்பாம்பு கோழியை விழுங்கியதில் மயங்கிய நிலையில் கிடந்தது. தகவலின்படி நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் சென்றனர். 12 அடி நீள மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி