உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருவிழாவில் முயல்? வனத்துறை கண்காணிப்பு

திருவிழாவில் முயல்? வனத்துறை கண்காணிப்பு

கெங்கவல்லி: கெங்கவல்லி மாரியம்மன், அக்கரை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நேற்று நடந்தது. அதில், 'பாரி வேட்டை' எனும் முயல் வேட்டை விழா நடத்துவர். அதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்த நிலையில், நேற்று, ஆத்துார், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கல்வராயன்மலை வனச்சரகங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர், கோவிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விழா குழுவினர் சிலர், 'மற்ற மாவட்டங்களில் பாரிவேட்டை திருவிழா நடத்த அனுமதிக்கின்றனர். இங்கு அனுமதிக்ககாததால், பாரம்பரிய திருவிழாவை நடத்த முடியாத நிலை உள்ளது' என கூறி, வனத்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். அதற்கு வனத்துறையினர், 'முயல் வேட்டை தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். இதனால் விழா குழுவினர் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ