உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயில்வே கைப்பந்துசேலம் அணி வெற்றி

ரயில்வே கைப்பந்துசேலம் அணி வெற்றி

சேலம்:ரயில்வே கோட்டங்கள் இடையே, பாதுகாப்பு படை அணிகளுக்கு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி தெற்கு ரயில்வே அளவில் கைப்பந்து போட்டி, சேலம் ரயில்வே கோட்டத்தில் நேற்று தொடங்கியது. சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் தொடங்கிவைத்தார். இதில் சென்னை, திருச்சி, பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் ரயில்வே கோட்ட அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில், 25 புள்ளிகள் எடுத்த சேலம் அணி, பாலக்காடு அணியை தோற்கடித்தது. 3 நாட்கள் போட்டி நடந்து, நாளை மாலை பரிசளிப்பு விழா நடக்க உள்ளது.பதிவு செய்து உரிமம் பெறமகளிர் விடுதிகளுக்கு அறிவுரைசேலம்:மகளிர் விடுதிகள் உரிய முறையில் பதிவு செய்து உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:சேலம் மாவட்டத்தில் அரசு, அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளை, சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், தொழிற்சாலைகளின் கீழ் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகள், தனியார் விடுதிகள் என அனைத்து வகை விடுதிகளும் சமூக நலத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு, https.tnswp.comஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல் விடுதி செயல்படுவது குற்றம். மீறி விடுதிகள் செயல்படுவது தெரிந்தால் நிரந்தரமாக மூடப்படும். உரிமம் தொடர்பான விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலக அறை எண்: 126ல் செயல்படும் சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை