உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆத்துார், ஏற்காட்டில் மழை

ஆத்துார், ஏற்காட்டில் மழை

ஆத்துார், : ஆத்துார், தலைவாசல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், நேற்று காலை, 9:00 மணி வரை தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதன்பின், சாரல் மழையாக பெய்தது. சாலை, தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.தலைவாசல் பகுதியில், அதிகபட்சமாக, 62 மி.மீ., மழை பெய்தது. ஆத்துார், 38, வீரகனுார், 33, கெங்கவல்லி, 18, தம்மம்பட்டி, 17 மி.மீ., மழை பதிவானது. தொடர் மழையால், ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளித்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார்.* ஓமலுார், தாரமங்கலம், வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், காரிப்பட்டி, கருமந்துறை உள்ளிட்ட பகுதியில், நேற்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு துாறல் மழை பெய்தது.ஏற்காடு மாணவ, மாணவியர் தவிப்புஏற்காட்டில், காலை முதல் தொடர் மழை பெய்து வந்ததால், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் ரெயின் கோட், ஜெர்கின் அணிந்து, குடை பிடித்தபடி சென்றனர். தொலைவில் உள்ள மலை கிராமங்களில் இருந்து, ஏற்காட்டில் உள்ள பள்ளிக்கு குழந்தைகள் வர முடியாத சூழல் நிலவியதால், குறைந்த அளவிலேயே வருகை புரிந்தனர். பள்ளி குழந்தைகள் நலன் கருதி, ஏற்காட்டில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க வேண்டும் என, பெற்றோர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ