உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாழப்பாடி ஆத்துாரில் மழை

வாழப்பாடி ஆத்துாரில் மழை

ஆத்துார், ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல், வெயில் அதிகமாக இருந்தது.ஆனால் இரவு, 7:00 மணிக்கு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. ஆத்துார், நரசிங்கபுரம், தென்னங்குடிபாளையம், அம்மம்பாளையம், மஞ்சினி, மல்லியக்கரை பகுதிகளில் கன மழையாக பெய்தது. 8:00 மணி வரை பெய்த மழையால், சாலை, தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.பின் குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால், விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேபோல் வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை, 6:00 மணிக்கு கருமேகம் சூழ்ந்து, வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெரிய கிருஷ்ணாபுரம், சிங்கிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !