ராஜகோபாலாச்சாரியார் நினைவு தினம் அனுசரிப்பு
சேலம், டிச. 26-மூதறிஞர் ராஜகோபாலாச்சாரியரின், 52வது நினைவு தினத்தையொட்டி, சேலம் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள, அவரது சிலைக்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம், அஸ்தம்பட்டி எக்ஸ்டென்ஷன் கிளை சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நேற்று நடந்தது. கிளை செயலர் நடராஜன் தலைமை வகித்தார்.ராஜகோபாலாச்சாரியார் சிலைக்கு, மாவட்ட தலைவர் ஸ்ரீநிவாசன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கிளை பொருளாளர் ராதாகிருஷ்ணன், அஸ்தம்பட்டி கிளை உறுப்பினர்கள், அழகாபுரம், ஜாகீர் அம்மாபாளையம், மரவனேரி, மேட்டுத்தெரு, சின்னதிருப்பதி உறுப்பினர்கள், நிர்வாகிகள், அஞ்சலி செலுத்தினர். கிளை மகளிர் அணி செயலர் சித்ரா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.