உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மயானத்தில் சாலை அமைக்க ரெட்டியூர் மக்கள் எதிர்ப்பு

மயானத்தில் சாலை அமைக்க ரெட்டியூர் மக்கள் எதிர்ப்பு

இடங்கணசாலை, இடங்கணசாலை நகராட்சி ரெட்டியூர், அருந்ததியர் தெருவில் வசிப்போர் இறந்தால் அடக்கம் செய்ய, சித்தர்கோவில் முனியப்பன் கோவில் அருகே, கே.கே.நகர் செல்லும் சாலையோரம் சுடுகாடு உள்ளது. அங்கு சில நாட்களுக்கு முன், நகராட்சி சார்பில் சிமென்ட் சாலை அமைக்க முயற்சி நடந்தது. மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, சாலை பணி ஒத்திவைக்கப்பட்டது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, அவசர அவசரமாக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. உடனே அங்கு வந்த மக்கள், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், மகுடஞ்சாவடி போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பினர்.இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'சடலங்களை புதைக்கும் இடத்தில் சாலை அமைக்க முயற்சிக்கின்றனர். சுடுகாட்டுக்கு உரிய இடத்தை அளவீடு செய்து, கம்பி வேலி அமைத்த பின் சாலை அமைக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி