உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோட்டை பெருமாள் கோவிலில் நாளை முதல் வழக்கமான பூஜை

கோட்டை பெருமாள் கோவிலில் நாளை முதல் வழக்கமான பூஜை

சேலம், சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவில் கும்பாபிேஷகம் கடந்த ஏப்., 20ல் நடந்தது. தொடர்ந்து, 24 நாட்கள் மண்டல பூஜை நடந்து, கடந்த, 14ல் நிறைவடைந்தது. ஜூன், 1 முதல் பிரமோற்சவ தேர் திருவிழா தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடக்க உள்ள விழாவில் தினமும் காலை, மாலையில், பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். இதனால் கும்பாபிேஷகத்துக்கு கட்டப்பட்டிருந்த யாகசாலை குண்டங்கள், கலச பீடங்களை இடித்து அகற்றி சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் நாளை முதல், வழக்கமான, தினசரி பூஜை, உற்சவங்கள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !