மேலும் செய்திகள்
கும்மிடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
17-Nov-2024
காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
12-Nov-2024
பனமரத்துப்பட்டி: மல்லுாரில் இருந்து வெற்றி நகர், பி.மேட்டூர் வழியே பனமரத்-துப்பட்டி மற்றும் ராசிபுரம் செல்லும் சாலையோரம், ஏராள-மானார் வீடு கட்டி குடியிருக்கின்றனர். சாலை விரிவாக்கம் செய்-வதால், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்-றிக்கொள்ள, கடந்த மாதம், 56 வீடுகளில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொது அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் வீடுகளை அகற்றக்கூடாது என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கேற்ப தற்போது, வீடுகளை அகற்றாமல் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இருப்பினும் வீடு முன் இருந்த பந்தல் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. சாலை, வீடுகள் இடையே பள்ளம் தோண்டி, சிமென்ட் கலவை போட்டு நிரவி, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளை அகற்-றாமல் பணி நடப்பதால், அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
17-Nov-2024
12-Nov-2024